ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்ட கற்பழிக்கப்பட்ட இளம்பெண்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (06:44 IST)
பிரிட்டனை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு கொலை செய்ய முயன்ற ஒருவனிடம் இருந்து தப்பி ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



 
 
பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் தங்கியிருந்தார். அவருடன் தங்கியிருந்த மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை கொலை செய்ய கத்தியால் கையில் குத்தியுள்ளார்.
 
இந்த நிலையில் கொலைகாரனிடம் இருந்த தப்பிய அந்த பெண், ஒரு அறைக்கு சென்று உள்ளே பூட்டிய பின்னர் ஃபேஸ்புக்கில் தனது காயங்களுடன் கூடிய படத்தை பதிவு உதவி கேட்டார். அவருக்கு அவசர உதவி எண், போலீஸ் எண் ஆகியவை தெரியாததால் அவர் ஃபேஸ்புக்கின் உதவியை நாடியுள்ளார்.
 
இதுகுறித்து அவரது நண்பர்கள் ஆஸ்திரேலிய போலீசின் கவனத்துக்கு கொண்டு சென்றதால் உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்