பொய்யான நியூஸ் போடுபவர்களுக்கு ஃபேஸ்புக் செய்த அதிரடி

புதன், 30 ஆகஸ்ட் 2017 (00:15 IST)
ஃபேஸ்புக்கை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும், பொய்யான செய்தி வெளியிடுபவர்களுக்கும், வதந்திகளை பரப்புவர்களுக்கு ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வாறு சமூக விரோத செயல்களை செய்யும் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்படுவதோடு அந்த பக்கங்களில் தோன்றும் விளம்பரங்களையும் நிறுத்த முடிவு செய்துள்ளது.



 
 
இந்த நடவடிக்கை பொய்யான செய்தி அதிகளவில் தடுக்கப்படும் நடவடிக்கையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஃபேஸ்புக்கில் பொய் செய்திகளும், பதட்டமான நேரத்தில் வதந்திகளும் அதிகம் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
 
பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் வருத்தம் தெரிவிப்பதோடு தொடர்ந்து உண்மையான செய்திகளை சிலகாலம் பதிவு செய்த பின்னரே அவர்களது பக்கங்களில் மீண்டும் விளம்பரம் தோன்றும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்