ஆட்டத்தை துவங்கிய அமெரிக்கா; சிரியா மீது தாக்குதல்: பீதியில் உலக நாடுகள்..

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (11:22 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா மீது தாக்குதல் நடத்தப்படும் என கூறிவந்த நிலையில், தற்போது தாக்குதலை துவங்கியுள்ளார். 
 
சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. சமீபத்தில் நடந்த ரசாயன தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகின.  
 
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.  
 
இதற்கு ரஷ்யா, சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைகள் வீசினால், அதை போர் குற்றமாக ரஷ்யா கருதும். அதன்பிறகு ரஷ்யா - அமெரிக்கா இடையே நேரடி போர் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. 
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து சிரியா மீது தாக்குதலை துவங்கினர். சிரியாவின் ரசாயன் ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
 
மேலும், சிரியா அரசு அதிக அளவில் ரசாயன் ஆயுதங்களை தயாரித்து பயன்படுத்துவதால், அமெரிக்கா போன்ற நாடுகள் இணைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து டிரம்ப் கூறியதாவது, இது தனி மனிதர் நடத்தும் தாக்குதல் அல்ல, அசுரனின் தாக்குதல் என தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு பதில் தாக்குதலாக சிரியா மற்றும் ரஷ்யா என்ன செய்ய போகிரது என்பது தெரியாமல், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்