யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகராக பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பணியில் இருந்தார். காட்பாடி அருகே அவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஒரு முன்பதிவு பெட்டியில் வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் பயணம் செய்தனர். அவர்களின் டிக்கெட்டுகளை காட்டுமாறு சந்தோஷ்குமார் கேட்டுள்ளார்.
அந்த கும்பலிடம் டிக்கெட் இல்லாததால், சந்தோஷ்குமாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அந்த கும்பல் ஒரு கட்டத்தில் டி.டி.ஆரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டனர். காயமடைந்த சந்தோஷ்குமார் காட்பாடி ரயில்வே போலீசில் புகார் செய்தார். திருப்பதியில் வைத்து ஒருவனை கைது செய்த போலீஸார், தப்பி ஓடிய 5 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.