ஆனால், ரசாயன் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என சிரியாவும் ரஷ்யாவும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியற்கான ஆதரங்கள் எதையும் இதுவரை ராணுவம் கைப்பற்றவில்லை எனவும் ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், சிரியா மீது ஏவப்படும் எல்லா ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்துவோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. தயாராக இரு ரஷ்யா. ஏனெனில் அமெரிக்க ஏவுகணைகள் வரும். ரசாயன வாயுவை செலுத்தி சொந்த நாட்டு மக்களை அழித்து மகிழ்ச்சி காணும் விலங்குடன் (சிரிய அதிபர் ஆசாத்) நீங்கள் கூட்டாக செயல்படக் கூடாது என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ரஷ்ய எம்பி, சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைகள் வீசினால், அதை போர் குற்றமாக ரஷ்யா கருதும். அதன்பிறகு ரஷ்யா - அமெரிக்கா இடையே நேரடி போர் ஏற்படும் என்று பதில் அளித்துள்ளார்.