மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் மூக்கின் வழியேதான் சுவாசிக்கிறோம்..ஆனால் ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் தன்னால் மூக்கின் வழியே சரியாக சுவாசிக்க முடியவில்லை என்று தலையை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அங்குள்ள டுனெட்ஸ்க் பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கத்தியால் குத்தப்பட்ட பிறகும் அப்படியே உட்கார்ந்திருந்த ஜோகோவை விசாரித்தனர்.
அப்பொழுது அவர் கூறியதாவது:
நான் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டேன் எனவே என் தலையை கத்தியால் துளைத்து அதன் மூலமாக மூச்சு எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் கத்தி அப்படியே தலையிலேயே நிற்கிறது என்று சகஜமாக கூறியுள்ளார்.
பிறகு அவர் போலீஸாரால் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.