இந்நிலையில் நேற்று மாலை நேரம் எழும்பூர் கோர்ட்டில் கோபாலுக்காக வக்கில்கள் ஆஜராகி வாதிடும் போது, நீதிபதி இந்து பத்திரிக்கை என்.ராம் அவர்களை ஊடக பிரதிநிதியாக கருதி அவரிடமிருந்து கருத்து கேட்டது. இதனையடுத்து பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகம் அதேசமயம் நீதியை நிலைநாட்டும் விதமாகவும்,நீதிபதி நக்கீரனை விடுதலையளித்து தீர்ப்பு அளித்தார். இதன்பின்பு வைகோவும் விடுவிக்கப்பட்டார்.
'செய்திகளை ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்த 124 சட்டப்பிரிவுக்கு எந்த ஒரு முகாந்தரமும் கிடையாது என நீதிபதி கோபிநாத் கூறியது ராஜ்பவன் கன்னத்தில் விழுந்த அறை. மேலும் ஆளுநர் தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து அமைச்சர்களை அனுமதிக்காமல் அதிகாரிகளை வைத்து கொண்டு நிர்வாகம் நடத்துகிறார்.' இவ்வாறு அவர் பேசினார்.