அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிஞ்ச் மற்றும் கவாஜா சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். அந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிஞ்ச் 66 ரன்களும் கவாஜா 85 ரன்களும் சேர்த்து தங்கள் விக்கெட்டை இழந்தனர். அதன் பின்பு வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகி வெளியேறியதால் அந்த அணி 78 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிஃப் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.