ஏழை மக்களுக்கு உதவ நன்கொடை அமைப்பு தொடங்கிய நடிகர் !!!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (21:01 IST)
உலகில்  கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்தபாடில்லை.  இந்நிலையில் பல்வேறு உலக நாடுகள் மக்களைப் பாதுகாக்க ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. அதனால் மக்கள் பலரும் வேலைக்கு செல்லமுடியாமல், பசியால் வாடுகின்றனர். அவர்கள் அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர்.
 

இந்தியாவிலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏழை எளிய மக்கள், வேலைக்குச் செல்லமுடியாமல் உணவு உண்ண முடியாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு உதவ பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்.

நடிகர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள்,அரசியல்வாதிகள் எனப்பலரும்  அரசுக்கு கொரோனா தடுப்பு நிதிக்கு நன்கொடை அளித்துவருகின்றனர்.

அதேபோல் அமெரிக்காவில் பிரபல டைடானிக் பட ஹீரோவும் ஆஸ்கார் விருது வென்றவருமான லியாணார்டோ டிகாப்ரியோ, ''அமெரிக்க உணவு நிதி'' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதன் மூலம் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்க இது உதவும் என தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்