இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் பெண்மணி

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (10:22 IST)
பிரிட்டனில் வாழும் பெண் ஒருவர் செயற்கை இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழ்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த பெண் செல்வா ஹுசைன். இவருக்கு இதயம் செயலிழந்து விட்டதால் ஹரிபீல்ட் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிதோதித்த மருத்துவர்கள் செல்வாவின் இதயம் முழுவதும் செயலிழந்து விட்டதாகவும், மாற்று அறுவை சிகிச்சை மூலமாக அவர் மறுவாழ்வு பெற முடியும் என்று கூறினர். இதனையடுத்து அவருக்கு 75 லட்ச ரூபாய் செலவில் செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.
இரண்டு பெரிய பிளாஸ்டிக் டியூப்கள் அவரது இதயத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இக்கருவி மோட்டார் மூலம் இயக்கப்படும். செயற்கை இதயத்தை ஹூசைன் தனது முதுகில் மாட்டிக் கொண்டு எங்கு சென்றாலும் எடுத்து கொண்டு தான் செல்வார். இதயத்தை பையில் சுமந்து கொண்டு பெண் உயிர் வாழ்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்