கேரள மாநிலம் கொச்சி நெடும்பாஞ்சேரியில் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து விமானம் ஒன்று வந்தது. விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய போதை தடுப்பு அதிகாரிகள், விமானத்தில் வந்திறங்கிய ஒரு பெண்ணின் நடவடிக்கை மீது சந்தேகப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனையடுத்து அவர் வைத்திருந்த சூட்கேசை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கொக்கைன் போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்பெண்ணிடம் விசாரணையை துரிதப்படுத்தினர்.