எம்எல்ஏ கன்னத்தை பதம் பார்த்த பெண் போலீஸ்: காரணம் இதுதான்!

சனி, 30 டிசம்பர் 2017 (18:22 IST)
இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஒருவர் பெண் போலீஸ் ஒருவரின் கன்னத்தில் அறைய அந்த பெண் போலீஸும் சற்றும் தாமதிக்காமல் அந்த எம்எல்ஏவின் கன்னத்தில் பளார் என அறைந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் தான் எம்எல்ஏவை அறைந்ததற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார்.
 
நடந்து முடிந்த இமாச்சலபிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய சென்றார்.
 
அப்போது ராகுல் காந்தியை பார்க்க ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஆஷா குமாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண் எம்எல்ஏ ஆஷா குமாரி பெண் போலீஸ் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார்.

 
உடனே சற்றும் தாமதிக்காமல் அந்த பெண் போலீஸ் காங்கிரஸ் எம்எல்ஏ பெண் எம்எல்ஏ ஆஷா குமாரியின் கன்னத்தில் பளார் என அறைவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ வைரலானதையடுத்து இந்த சம்பவம் குறித்து அந்த பெண் போலீஸ் விளக்கம் அளித்துள்ளார்.
 
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நாங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது எம்எல்ஏ ஆஷா குமாரி வந்தார். ஆனால் அவர் எம்எல்ஏ என்பது எனக்கு தெரியாது. எனவே அவரை சற்று காத்திருக்குமாறு கூறினேன். ஆனால் அவர் நான் யார் என்று தெரியுமா என கூறி மூன்று முறை என்னை கன்னத்தில் அறைந்தார்.
 
எனவே என்னை தற்காத்துக்கொள்ளவே அவரை நான் திருப்பி அறைந்தேன். அதன் பின்னர் தான் அவர் எம்எல்ஏ என்பதே எனக்கு தெரியவந்தது. அந்த எம்எல்ஏ மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். இதில் எனக்கு நீதி கிடைக்கும் என்றார் பெண் போலீஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்