ப்ராவுக்குள் மறைந்திருந்த பாம்பு! எட்டிப்பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி! – நூதன சம்பவம்!

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (10:27 IST)
சீனாவில் பெண் ஒருவர் தனது உள்ளாடைக்குள் பாம்புகளை மறைத்து வைத்து எடுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உலகம் முழுவதும் பல்வேறு வகையான கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் அதிகம் பலருக்கு தெரிய வராத ஒன்று உயிரினங்கள் கடத்தல் சம்பவங்கள். ஒரு நாட்டில் உள்ள அரிய உயிரினங்களை ஆராய்ச்சி மற்றும் பல பயன்பாடுகளுக்காக இன்னொரு நாட்டிற்கு சட்ட விரோதமாக கடத்த சில கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அவ்வபோது இந்த கும்பல்கள் பிடிபடுவதும் வாடிக்கையாக உள்ளது.

சமீபத்தில் சீனா – ஹாங்காங் இடையேயான எல்லை பகுதியில் பெண் ஒருவர் எல்லையை கடந்து சென்றுள்ளார். ஆனால் அவரது உடலமைப்பு வழக்கத்தை விட வித்தியாசமாக இருந்ததால் சோதனை அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர். அவரை தனியாக அழைத்து சோதனை செய்தபோது அவரது உள்ளாடைக்குள் சாக்ஸில் ஏதோ சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த சாக்ஸ் பேக்கேஜ்களை எடுத்து பிரித்த அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அதில் சில பாம்புகள் இருந்துள்ளன.

இந்த பாம்புகள் மத்திய அமெரிக்க நிலங்களில் வாழக்கூடியவை என்றும் அவற்றை பெண்மணி முறைகேடாக உள்ளாடையில் வைத்து கடத்தி சென்றதும் தெரிய வந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்