அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இணைந்து விண்வெளியில் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை அமைத்துள்ளன. இந்த விண்வெளி மையத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு ஆய்வுப் பணிக்காக பல நாடுகளைச் சேர்ந்த நன்கு பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் சில மாதங்கள் வரை அங்கு தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்வர்.
இந்த நிலையில், உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவன அதிபருமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது.
இந்தக்குழு ஆறுமாதம் விண்வெளி மையத்தில் தங்கி ஆய்வு செய்து வருகிறது.
கடந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் டிராகன் எண்டவர் விண்கலத்தில் குழு அனுப்பியது. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி. புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குழு 7 ஐ விண்வெளி மையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.