திருவண்ணாமலை கோயிலில் தரிசன கட்டணம்: ரூ.50-லிருந்து ரூ.500-ஆக உயர்வு!

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (10:25 IST)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசன கட்டணம் இதுவரை ரூ.50 என இருந்த நிலையில் தற்போது அது 500 ரூபாயாக உயர்ந்துள்ளதை அடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்  
 
அண்ணாமலையார் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். குறிப்பாக பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதும் கிரிவலம் செல்லும் பக்தர்களும் வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் திருவண்ணாமலையில் கட்டண தரிசனத்திற்கு இதுவரை ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி 500 ரூபாய் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 முன்னறிவிப்பு இன்றி திடீரென  கட்டணம் உயர்ந்து உள்ளதற்கு பக்தர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்