விரிசல் விட்ட பனிப்பாறை... லண்டனை விட பெரியதென்பதால் பதற்றம்!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (08:51 IST)
அண்டார்க்டிகாவில் லண்டன் நகரை விடப் பெரிய பனிப்பாறையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 
அண்டார்க்டிகாவில் லண்டன் நகரை விடப் பெரிய பனிப்பாறை ஒன்று இரண்டாக பிளந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு நடத்திய பிரிட்டிஷ் அண்டார்க்டிக் சர்வே அமைப்பினர் தற்போது உடைந்துள்ள பனிப்பாறை சுமார் 1,270 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. 
 
தற்போது இந்த பாறையில் 20 கிமீ நீளத்திற்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாறை அளவில் லண்டனை விட பெரியதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பனிப்பாறை நகர்வை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்