6000 ஆண்டுகளுக்கு முன்னரே சுனாமியால் இறந்தவரின் மண்டை ஓடு...

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (10:29 IST)
6000 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி தாக்குதலால் இறந்தவரின் மண்டை ஓடு குறித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.


 
 
ஆஸ்திரேலிய கண்டத்தில் பப்புவா நியூ கினியா என்ற ஒரு சிறிய தீவு உள்ளது. இந்த தீவில் கடந்த 1929 ஆம் ஆண்டு ஐடாப் என்ற இடத்தில் மனித மண்டை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 
 
இந்த மண்டை ஓடு குறித்து விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வந்தனர். 1998 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு பின்னர் இந்த ஆராய்ச்சியில் சர்வதேச குழு ஒன்று உட்படுத்தப்பட்டது. 
 
இந்நிலையில், 1929 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம், இதற்கு சொந்தமான நபர் சுனாமி தாக்குதலால் இறந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்