மனித மண்டை ஓடுகளால் ஆன கோபுரம்: அதிர வைக்கும் மாயன் கலாச்சாரம்!!

செவ்வாய், 4 ஜூலை 2017 (11:15 IST)
மெக்சிகோ நகரில் மனித மண்டை ஓடுகளால் வடிவமைக்கப்பட்ட வட்ட கோபுரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


 
 
மெக்சிகோவில் Aztec என்னும் பழங்காலத்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியில் ஆய்வாளர்கள் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
 
இந்த தேடுதலின் போது 676 மனித மண்டை ஓடுகளால் வடிவமைக்கப்பட்ட வட்ட வடிவ கோபுரம் ஒன்றை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மாயன் வம்ச காலகட்டத்தில் நரபலி கலச்சாரம் இருந்து வந்துள்ளது என்பதை இது உறுதிபடுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


 

 
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளால் ஆன கோபுரம் ஸ்பெயின் நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
 
கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்