நெதர்லாந்தை தாக்கிய மினி சுனாமி: வீடியோ!!

சனி, 3 ஜூன் 2017 (10:45 IST)
நெதர்லாந்தில் கடற்கரையில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவானதால், சிறிய ரக படகுகள் மற்றும் பொருட்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.


 
 
நெதர்லாந்தின் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் காலை 5.45 மணி அளவில் (உள்ளூர் நேரம்) கடலில் இருந்து அலைகள் வேகமாக வரத் தொடங்கியது. 
 
அதன் பின் கடலில் இருந்து அலைகள் சுனாமி அலைகள் போல் எழும்பி வந்துள்ளது. இதனால் கடற்கரையில் இருந்த படகுகள், நாற்காலிகள் மற்றும் பொருட்கள் கடலுனுள் இழுத்துச் செல்லப்பட்டன.
 
இந்த அலைகள் சுமார் 7 அடி வரை எழும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்