ஐஎஸ்ஐஸ் இயக்கத் தலைவரை காட்டிக்கொடுத்த உளவாளிக்கு ரூ 177 கோடி பரிசு !

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (20:42 IST)
இராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்று தனி இஸ்லாமிக் நாடு வேண்டும் என வன்முறை தாக்குதல் நடத்தி, உலக நாடுகளையும் அச்சுறுத்தி,  அப்பாவி மக்களை கொன்று குவித்து  வந்த ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாத் சிரியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத் துறைக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து, கடந்த 26 ஆம் தேதி, சிரியாவில் ஒரு சுரங்கத்துக்குள் பதுங்கி இருந்த ஐஎஸ். ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதை அமெரிக்க  ராணுவத்தினர் நெருங்கிய போது, தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து அவர்  தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில், ஐஎஸ்.ஐஎஸ், அமைப்பில் அமெரிக்க உளவியல் ஒருவர் செயல்பட்டு வந்ததாகவும், அவர்தான் பாக்தாதி பதுங்கி இருக்கும் இட்டத்தை சரியாக அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிகிறது.
 
இந்நிலையில் உளவாளியாகச் செயல்பட்ட அந்த அதிகாரிஉக்கு ரூ. 177 கோடி அமெரிக்காவின் சார்பாக பரிசாக அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்