அந்த தியாகி யார் என்ற வாசகம் அடங்கிய பேட்ஜை நேற்று அணிந்த அதிமுக உறுப்பினர்கள், அவையில் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், இன்று சட்டசபை தொடங்கிய போது அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.
சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றும் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடுவார்களா? சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அதிரடி நடவடிக்கை எடுத்து, இன்றும் அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.