நாளை (27.10.2019) உலகமெங்கும் தீபாவளி திருநாள் கொண்டாடப்படும் நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இந்துகள் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பி.க்களான கமலா ஹாரிஸ், பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமி பெரா, ரோ கண்ணா ஆகியோர் தீபாவளியை கொண்டாடினர்.
இது குறித்து கமலா ஹாரீஸ், ”விரக்தியை விட்டு நம்பிக்கையுடன் வாழ இந்த தீபாவளி எங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்” என கூறினார். மேலும் இது குறித்து ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்த விழா இருளின் மீதான ஒளியின் வெற்றியை பிரதிபலிக்கிறது” என கூறினார். இந்த விழாவில் அமெரிக்க எம்.பி.களும் கலந்த் கொண்டது குறிப்பிடத்தக்கது.