மேயராக இருந்தபோது செய்ததை மறந்துவீட்டீர்களா? ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (08:16 IST)
கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அரசு அளித்துள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்த எதிர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னை நகரில் தெருக்குப்பைகளை அள்ள முதன்முதலாக ஓனிக்ஸ் என்ற சிங்கப்பூர்/மலேசிய நாட்டின் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கிய வரலாற்றை மறந்துவிட்டீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
தமிழிசையின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தள பயனாளிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சென்னையில் குப்பை அள்ள கொடுத்த ஒப்பந்தத்திற்கு சென்னை மக்கள் பணம் கொடுக்கவில்லை. சென்னை மாநகராட்சி தான் கொடுத்தது. ஆனால் கோவையில் நிலைமை அப்படி அல்ல. இனிமேல் பிரான்ஸ் நிறுவனம் நிர்ணயிக்கும் குடிநீர் கட்டணத்தை தான் கோவை மக்கள் செலுத்தியாக வேண்டும். இந்த இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக டுவிட்டர் பயனாளிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் டுவிட்டர் இணையதளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்