உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி அபார வெற்றி

வெள்ளி, 22 ஜூன் 2018 (08:59 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் ஒன்றான பிரான்ஸ் மற்றும் பெரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரான்ஸ் அணி பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
 
சி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ், பெரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதியில் 34-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் கில்லான் மொபாபே அபாரமாக தனது அணிக்காக ஒரு கோல் அடித்து 1-0 என்ற கோல்கணக்கில் தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.
 
இதனையடுத்து இரண்டாம் பாதியில் இந்த கோலை சமன்படுத்த பெரு அணி பெரும் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் போடாததால் இறுதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
 
அதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி டென்மார்க் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்