கோவை மக்களுக்கு குடிநீர் வழங்கும் பிரான்ஸ் நிறுவனம்: ஸ்டாலின் எதிர்ப்பு

திங்கள், 25 ஜூன் 2018 (19:53 IST)
பொதுமக்களுக்கு இதுவரை குடிநீரை நகராட்சி, மாநகராட்சி ஆகிய அரசு அமைப்புகளே வழங்கி வந்த நிலையில் தற்போது கோவையில் குடிநீர் வழங்கும் உரிமையை பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கோவை மாநகராட்சியின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
 
கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை பிரான்ஸ் நாட்டின் சுயல் என்ற நிறுவனத்துக்கு ரூ.3,150 கோடிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
கோவை மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தனியார் நிறுவனத்துக்கு அரசு தருவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின் உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
முன்னதாக கோவை மாநகராட்சிக்கு 26 ஆண்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரூ.3150 கோடிக்கு ஃபிரான்சின் சுயல் நிறுவனத்திற்கு அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த தனியார் நிறுவனம் அதிகளவு பொதுமக்களிடம் இருந்து குடிநீர் கட்டணம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்