'மீடூ' வை பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது : நடிகை ஜனனி பேட்டி!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (16:03 IST)
சினிமா மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக ஜனனி ஐயர்  கூறினார்.
சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுநிகழ்ச்சியில் நடிகை ஜனனி ஐயர் மற்றும் நடிகர் தாடி பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு  நடிகர் ஜனனி ஐயர் பேட்டியளித்ததாவது:சமீப காலமாக நிறைய பெண்கள் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசுறாங்க.இது ஹெல்தியான விஷயம்.
 
சினிமா உலகத்தை தாண்டி, ஐடி பீல்டு உள்பட எல்லா துறையிலுமே பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருக்கு. சினிமா  துறைங்கிறதால  பெருசா பேசப்படுது.
 
பெண்கள் 'மீடு' விவகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. பாதிக்கப்பட்ட பெண்கள்ஆறுமாதம், ஒரு வருடங்கள் என காலம் கடத்தாமல் உடனே தங்களுக்கு நடந்ததசொல்லணும். அவங்க உடனே வெளியே சொன்னால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும்நடக்காது.  தப்பு செய்யிற வங்களுக்கு பயம் வரும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்