கூட்டமே இல்லாத சூப்பரான Hill station.. தமிழ்நாட்டு பக்கத்துலேயே..! – அசரவைக்கும் கெவி சுற்றுலா தளம்!

Prasanth Karthick
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (15:16 IST)
தற்போது சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் பலரும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லத் தொடங்கியுள்ளதால் கூட்டம் அதிகரித்துள்ளது. சுற்றுலா செல்வதே இயற்கையை ரசித்து மன அமைதியாக இருக்கதானே.. அப்படி அதிக கூட்டமில்லாத அழகிய மலைவாசஸ்தலத்திற்கு செல்ல விரும்பினால் தமிழக – கேரள எல்லையில் உள்ள கெவி சூப்பரான சாய்ஸாக இருக்கும்.



கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள கெவி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். சபரிமலையிலிருந்து 3 மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ள கெவிக்கு அருகிலேயே பெரியார் தேசிய பூங்கா, கொச்சு பம்பை அணை, நீர்வீழ்ச்சி என சுற்றி பார்க்க பல பகுதிகள் உள்ளன. சுற்றிலும் மலை சூழ்ந்த சபரிமலை வ்யூ பாயிண்ட், முல்லைப்பெரியாரு அணை என பல பகுதிகளை மலைகளிலிருந்து பார்த்து ரசிக்கலாம், படகு சவாரி செய்யலாம்.

குறைவான பயணிகளே வந்து செல்லும் கெவி அதிக வெப்பநிலை இல்லாத, கூட்டம் இல்லாத அழகிய சுற்றுலா பகுதியாகும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்