ஜிகர்தண்டா 2 படத்தில் இருந்து விலகிய தயாரிப்பு நிறுவனம்… பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (08:12 IST)
2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் முந்தைய பாகத்துக்கும் இப்போது உருவாகும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். படம் பீரியட் திரைப்படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்த ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்போது படத்தில் இருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. படத்தின் பட்ஜெட் அதிகமானதோடு, படத்தின் ஓடிடி உரிமையை கார்த்திக் சுப்பராஜ் நெட்பிளிக்ஸுக்கு விற்றுவிட்டதால் ஜி நிறுவனம் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்