சங்கமித்ரா படம் எப்போது தொடங்கும்?... இயக்குனர் சுந்தர் சி தகவல்!

vinoth

திங்கள், 21 ஏப்ரல் 2025 (13:23 IST)
ஜெயம்ரவி, ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் சங்கமித்ரா. 2017 ஆம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது என்பதும் 2018ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகிகளாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் ஒப்பந்தமாகி இருந்தனர்.

ஆனால் பொருளாதார பிரச்சனை காரணமாக இந்த படம் தொடங்கப்படவில்லை. அதனால் சுந்தர் சி தன்னுடைய ஸ்டைல் படங்களுக்குத் திரும்பி கமர்ஷியல் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஏப்ரல் 24 ஆம் தேதி அவருடைய ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

இது சம்மந்தமாக அவர் அளித்துள்ள நேர்காணலில் சங்கமித்ரா படம் எப்போது தொடங்கும் என்பது சம்மந்தமானக் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “சங்கமித்ரா படம் அடுத்த ஆண்டில் தொடங்கும். தற்போது கைவசம் எனக்கு இருக்கும் படங்கள் இருப்பதை எல்லாம் முடித்துவிட்டு சங்கமித்ராவை தொடங்குவேன். ஏனென்றால் சங்கமித்ரா படத்தை எடுக்க வேண்டுமென்றால் எனக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படும்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்