பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.
அதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மெருகேற்றப்பட்டு இப்போது ஜூன் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனாலும் இப்போதும் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் ரிலீஸீன் போது ஒவ்வொரு காட்சிக்கும் அனைத்து தியேட்டர்களிலும் ஆஞ்சநேயருக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என அறிவித்துள்ளனர்.