கௌதம் மேனன் மம்மூட்டி படத்தின் இசையமைப்பாளர் இவரா?... பல ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

vinoth

வெள்ளி, 12 ஜூலை 2024 (17:43 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதிக்க உள்ளார். மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை அவர் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தை மம்மூட்டியே தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை கேரளாவில் எளிமையாக நடந்தது. இந்த பூஜை சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவருக்குப் பதிலாக சமந்தா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தர்புகா சிவா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தர்புகா சிவா ஏற்கனவே கௌதம் மேனனோடு என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்