ஒரு அண்ணனாக உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்… ராயன் குறித்து செல்வராகவன்!

vinoth
வெள்ளி, 26 ஜூலை 2024 (15:43 IST)
நடிகர் தனுஷ் நடித்து, இயக்கியுள்ள அவரின் 50 ஆவது படமான ‘ராயன்’இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அனைவரின் நடிப்பும் பாராட்டப்பட்டாலும், படத்தில் செல்வராகவன் நடித்துள்ள கதாபாத்திரம் ரசிகர்களைப் பெரிய அளவில் கவர்ந்துள்ளது. இந்நிலையில் படம் பார்த்த பின்னர் பதிவிட்டுள்ள இயக்குனர் செல்வராகவன் “ராயன் படம் பார்த்தேன். என்னிடம் வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு படம் சிறப்பாக உள்ளது. நடிகராகவும் இயக்குநராகவும் தனுஷ் ஒவ்வொரு காட்சியிலும் ஜொலிக்கின்றார்.

ஒரு அண்ணனாக உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகின்றேன் தனுஷ். ஏ.ஆர். ரஹ்மான் சார், நீங்கள் எங்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். படத்தில் அனைவரது நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்