அறிமுக இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிக்கும் படம், எங் மங் சங். பிரபுதேவா இதில் சீனா சென்று குங்ஃபூ கற்றுக் கொண்டவராக வருகிறார்.
இந்தப் படத்தில் பிரபுதோவாவை சீனாவுக்கு அனுப்பி குங்ஃபூ கற்க வைக்கும் பிரபுதேவாவின் அப்பா வேடத்தில் தங்கர் பச்சான் நடிக்கிறார். இந்தப் படத்தின் பெயர்தான் அனைவரையும் கவர்ந்த விஷயம். எங் மங் சங்... அப்படீன்னா?
எங்க நாராயணன், மங்களம், சங்கர் என்ற மூன்று நண்பர்களை பற்றிய கதையாம் இது. அவர்களின் முதலிரு எழுத்துக்களை வைத்து எங் மங் சங் என்று பெயர் வைத்துள்ளனர்.