'விடுதலை’ படம் வரலாற்றை திரித்துள்ளது: எழுத்தாளர் முருகவேள்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (13:17 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ஒரு வரலாற்று திரிப்பு என்றும் இரண்டு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டது என்றும் பிரபல எழுத்தாளர் முருகவேல் என்பவர் தெரிவித்துள்ளார். 
 
இந்த படம் ஒரு கதை திருட்டு படமாகும்.  சோழகத்தொட்டி என்ற புகழ் பெற்ற நாவலில் உள்ள காட்சிகளை திருடி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீரப்பன் சம்பந்தப்பட்ட புத்தகங்களில் உள்ள காட்சிகளிலும் திருடப்பட்டு உள்ளது. அதுமட்டும் இன்றி இந்த படம் ஒரு வரலாற்று திரிப்பு 
 
இந்த படத்தில் எதுவுமே அழுத்தமாக சொல்லப்படவில்லை. விடுதலை படம் என்பது பழனி பஞ்சாமிருதத்தையும் பாண்டியன் ஊருகாயையும் மிக்ஸியில் அடித்த மாதிரி இருக்கிறது என்று எழுத்தாளர் முருகவேல் தெரிவித்துள்ளார். 
 
மேலும் வன அதிகாரிகளுக்கு எதிராக பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்த இந்த கதையில் அரசியல் கட்சிகள் இணைந்து இருப்பது போன்று குழப்பத்தை விடுதலை படம் ஏற்படுத்தி உள்ளது என்றும் எந்த அரசியல் கட்சியும் வனத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கு உதவவில்லை என்றும் இது ஒரு வரலாற்று திரிப்பு என்றும் எழுத்தாளர் முருகவேல் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்