“இவன நம்ப முடியாது..” – வெற்றிமாறனை செல்லமாகக் கோபித்துக் கொண்ட சீமான்!

திங்கள், 3 ஏப்ரல் 2023 (08:44 IST)
கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை முதலில் 4 கோடி ரூபாயில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸாகி பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படக்குழுவோடு இணைந்து பார்த்தார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் படத்தையும் படக்குழுவையும் சிலாகித்து பாராட்டினார். அப்போது பேசிய அவர் “இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போவே பாக்கணும் போல இருக்கு. ஆனால் வெற்றிமாறன நம்ப முடியாது. இப்படிதான் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் வரும் என சொல்லிவிட்டு வேறு படத்தை இயக்க ஆரம்பித்து விடடான். ஆனால் இந்த முறை அப்படி நடக்காது என்பதற்காகதான் இரண்டாம் பாகத்தின் காட்சிகளை கிளைமேக்ஸில் இணைத்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்