தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் விடுதலை படத்தை வெகுவாக கொண்டாடுகிறார்கள்.மதுரை சினிப்ரியா திரையரங்கில் ரசிகர்களோடு விடுதலை -1 திரைப்படத்தை பார்ப்பதற்காக திரைப்படத்தின் கதாநாயகன் சூரி நேரில் வந்து ரசிகர்களோடு அமர்ந்து திரைப்படத்தை கண்டு ரசித்தார்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை விட வேறு என்ன பெருமை இருக்கிறது. இந்த படத்திற்கோ இந்த படத்தில் யாருக்கு தேசிய விருது கிடைத்தாலும் அது எனக்கு கிடைத்த போன்ற மகிழ்ச்சியை தரும் தேசிய விருது பெற்ற வெற்றிமாறனின் படத்தில் நடித்ததை விட எனக்கு வேறு என்ன வேண்டும் , மிகப்பெரிய நடிகர் விஜய் சேதுபதியோடு நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி இந்தத் திரைப்படத்திற்காக ஒவ்வொரு கலைஞர்களும் மிகவும் கஷ்டபட்டிருக்கிறார்கள்
ரோகினி திரையரங்கில் நடைபெற்ற அனுமதி மறுப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூரி, எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்றுதான் என்பதை தெரியப்படுத்த தான் திரையரங்கு வந்தது, நீ நான் என்ற வேறுபாடு திரையரங்கிற்கு கிடையாது,, இந்த சம்பவத்திற்கு நான் வருத்தப்படுகிறேன், எந்த சூழலில் இது நடந்தது என்று தெரியவில்லை, திரையரங்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்றார்.