நயன்தாரா - விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளின் பெயர் அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (12:12 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு சில மாதங்களில் வாடகத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரின் இந்த இரட்டை ஆண் குழந்தைகள் குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. 
 
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்களது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ந்த குழந்தைகளின் பெயர் குறித்து அவர் இருப்பதாவது:
 
இனிய நண்பர்களே நாங்கள் எங்களுடைய குழந்தைக்கு பெயர் வைத்துள்ளோம். 
இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன் மற்றும் 
உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைத்துள்ளோம்.  இதில் N என்பது உலகின் மிகச்சிறந்த அம்மாவான நயன் தாராவை குறிக்கின்றது’ என்று குரிப்ப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்