ராக்கி படம் ஓடிடி ரிலீஸா? விக்னேஷ் சிவன் பதில்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (15:56 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் விநியோக நிறுவனம் 3 படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் மாறி இப்போது 5க்கும் மேற்பட்ட படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் திரையரங்குகள் இப்போது திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அந்த படங்களை எல்லாம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளாராம். முதலில் நயன்தாரா நடிப்பில் அவர் உருவாக்கியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தை ரிலிஸ் செய்ய உள்ளாராம்.

இந்நிலையில் அவர் வாங்கி வைத்துள்ள ராக்கி திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இது சம்மந்தமாக ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர் ‘தியேட்டர்கள் திறந்ததும் ராக்கி படம் திரையிடப்படும்’ என அறிவித்துள்ளார். அதனால் ஓடிடி ரிலீஸுக்கு வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்