இஸ்ரேல் பிரதமராக இருந்த நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில் புதிய பிரதமராக பென்னட் பதவியேற்றுள்ளார். கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 54 இடங்களைப் பிடித்தது. அவரால் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க முடியாத சூழலில் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்தன. அந்த கட்சிகள் சுழற்சி முறையில் பதவியைப் பகிர்ந்துகொள்ள உள்ள நிலையில் இப்போது யாமினா கட்சியின் தலைவர் நப்தாலி பென்னட் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.