கொரோனா குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர வேண்டும்! – சென்னை நீதிமன்றம் அறிவுறுத்தல்!

திங்கள், 14 ஜூன் 2021 (13:40 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த சில வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் அதித்தன் மனு அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் ஏற்கனவே விமான பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் 2வது அலை தணிந்து வரக்கூடிய நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனா குறையும் மக்களின் நலன் கருதி கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்