''நானே வருவேன் ''பட டீசர் நாளை எப்போது ரிலீஸ்? தனுஷ் டுவீட்

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (21:20 IST)
தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை எப்போது டீசர் வெளியாகும் என்ற தகவல்வெளியாகியுள்ளது.

தனுஷ் செல்வராகவன் யுவன் கூட்டணியில் உருவான அனைத்துப் படங்களும் மிகப்பெரிய  வெற்றியைப் பெற்ற் நிலையில், இவர்கள் கூட்டணியில்   தற்போது உருவாகியுள்ள படம் நானே வருவேன்.

 
இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இப்படத்தில் தனுஷுடன் இணைந்து, எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை மாலை 6 மணிக்கு  இப்படத்தின் டீசர் வெளியாகும் என நடிகர் தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்