’நானே வருவேன்’ படத்தின் பாடலை பாடிய விஜய் டிவி பிரபலம்!

புதன், 7 செப்டம்பர் 2022 (19:14 IST)
தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பாடலை விஜய் டிவி பிரபலம் ஒருவர் பாடியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
நானே வருவேன் படத்தில் இடம்பெற்ற வீரா சூரா என்ற பாடல் இன்று வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கும் நிலையில் அவருடன் இணைந்து முத்துச்சிப்பி பாடியுள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவாகி இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்