மீராமிதுன் தலைமறைவாக இருக்கும் இடம் கண்டுபிடிப்பு: விரைந்து செல்லும் காவல்துறை

புதன், 14 செப்டம்பர் 2022 (19:46 IST)
நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கண்டு பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வந்தனர். இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் பெங்களூரில் இருப்பதாகவும் இதனை அடுத்து அவரை பிடிக்க காவல்துறை அதிகாரிகள் பெங்களூர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
தமிழ் சினிமாவில் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்த மீரா மிதுன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் அதன்பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு மீராமிதுன் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து மீராமிதுன் தலைமறைவானார்
 
தற்போது அவர் பெங்களூரில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதை அடுத்து அவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்