கடவுளுக்குப் பிறகு சினிமா தியேட்டரையே அண்ணாந்து பார்க்கிறோம்: மிஸ்கின்

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (18:00 IST)
கார்னிவெல் சினிமாஸ் நிறுவனம் சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள  ஈ.வி.பி சிட்டியில் ஒரே வளாகத்தில் 6 திரையரங்குகளை மிகப் பிரமாண்டமாக நிறுவியுள்ளது. அதன் திறப்புவிழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரபல படத்தயாரிப்பாளர்கள் கலைப்புலி 


 
எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், விநியோகஸ்தர் அருள்பதி, இயக்குநர்கள் மிஷ்கின், ராம் , பாபு கணேஷ் , நட்சத்திரங்கள் வைபவ், சவுந்திரராஜன் , `பேரன்பு ' சாதனா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
 
விழாவில் பேசிய மிஸ்கின், `கடவுளுக்குப் பிறகு, நாம் அண்ணாந்து பார்ப்பது சினிமா தியேட்டரைத்தான். எனவே, எல்லோரும் சின்னத்திரையில் சீரியல் பாருங்கள். அதேபோல பெரிய திரையில் ரிலீஸாகும் சினிமாவை தியேட்டருக்கு வந்துப் பாருங்கள். பைரஸியை திருட்டு வி.சி.டியை திரும்பி பார்க்காதீர்கள்''  என்றார். அவரைத்தொடர்ந்து பேசிய, இயக்குநர் ராம், ``எனது `பேரன்பு' முதல் சினிமாவாக இங்கு திரையிடப்படுவது சந்தோஷமா உள்ளது. கூடவே பெருமையா உள்ளது' என்றார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்