எவ்வளவு கடன் ஏறினால் என்ன? அசராமல் இலவச திட்டங்களுக்கு தாரளம் காட்டிய ஓபிஎஸ்

வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (17:51 IST)
தமிழக அரசு எண்ணற்ற இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகளை துறை வாரியாக பார்ப்போம்.


 
பெண்களுக்காக தாலிக்குத் தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம் அளிக்கிறது. இதற்காக ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு 
 
விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்கு 198.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 
 
தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர். 
 
நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
மாணவர்களுக்கு புத்தகப் பைகள் காலணிகள் நோட்டு புத்தகங்கள் உட்பட மாணவர்களுக்கு விலையில்லா திட்டங்களுக்காக 1,656.90கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.மாணவர்களின் பயண கட்டண சலுகைக்காக ரூ. 766 கோடி ஒதுக்கீடு.
 
 முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க ரூ. 460.25 கோடி ஒதுக்கீடு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்