இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள கூலி படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள ஒரு நேர்காணலில் ரஜினிகாந்த் கூலி படம் பார்த்தபின்னர் தன்னிடம் சொன்னதைப் பகிர்ந்துள்ளார். அதில் “ரஜினி சார் கூலி படம் பார்த்துவிட்டு என் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க விரும்புவதாகக் கூறினார். அது கூலி படத்தின் தொடர்ச்சியாக இருக்காது.” எனத் தெரிவித்துள்ளார்.