இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ஜமால் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்த படம் பற்றி சமீபத்தில் பேசியுள்ள ஏ ஆர் முருகதாஸ் “மதராஸி படம் கஜினி போன்ற திரைக்கதையும், துப்பாக்கி படம் போன்ற ஆக்ஷன் காட்சிகளும் இருக்கவேண்டும் என்று மனதில் வைத்து எழுதப்பட்டது. இப்போது படம் பார்க்கும் போது அது உறுதியாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.