புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘சய்யாரா’ 300 கோடி ரூபாய் வசூல்… ஆச்சர்யத்தில் பாலிவுட்!

vinoth

திங்கள், 28 ஜூலை 2025 (10:20 IST)
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்கள்  தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வந்தன. இதில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான கான் நடிகர்களும் அடக்கம். ஆனால் தற்போது மெல்ல தங்கள் வெற்றிப் பாதைக்குப் பாலிவுட் திரும்பியுள்ளது.

ஆஹான் பாண்டே மற்றும் அனீத் படா ஆகிய இரு புதுமுகங்களை வைத்து மோஹித் சூரி இயக்கத்தில் யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்த திரைப்படம் ‘சய்யாரா’. இந்த படம் கடந்த 18 ஆம் தேதி ரிலீஸான நிலையில் இதுவரை 300 கோடி ரூபாய்க்கு வசூல் செய்து பாலிவிட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படம் திரையரங்க வாழ்க்கையை முடிக்கும் போது 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A moment to remember எனும் 2004 ஆம் ஆண்டு வந்த கொரியப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது சய்யாரா. ஒரு மன உளைச்சலில் இருக்கும் இசைக்கலைஞனின், கூச்ச சுபாவம் கொண்ட கவிஞர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஆழமான உறவைப் பற்றியது இந்த படம் என்பதால் இளைஞர்களால் அதிகளவில் இந்த படத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. அதுவே இந்த படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்