தினகரன் – குக்கர்- ஓபிஎஸ் & ஈபிஎஸ் ; இன்று வருகிறது முக்கியத் தீர்ப்பு

வியாழன், 7 பிப்ரவரி 2019 (09:20 IST)
குக்கர் சின்னத்தை நிரந்தர சின்னமாக வழங்கக் கேட்டு தினகரன் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்த போது இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றுவதில் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக வுக்கும் தினகரன் தலைமையிலான அமமுக வுக்கும் இடையில் அதிகாரப் போட்டி நடைபெற்றது. பா.ஜ.க. வின் ஆதரவைப் பெற்றமையால் சின்னம் அதிமுக வுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதையடுத்து வந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக நின்ற தினகரன் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆச்சர்யத்தக்க வகையில் வெற்றிப்பெற்றார். அதனையடுத்து இனி வர இருக்கும் அனைத்து தேர்தல்களிலும் தங்களுக்கு குக்கர் சின்னத்தையே வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதேப் போல தேர்தல் ஆணையத்தின் சார்பாக ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்னும் முறையாக பதிவு செய்யப்படவில்லை. அதனால் அந்தக் கட்சிக்குப் பொதுவான சின்னத்தை ஒதுக்க முடியாது’ என விளக்கமளிக்கப்பட்டது. தினகரன் தரப்பில் ‘ எங்களுக்கென்று ஒருப் பொதுவான சின்னம் இல்லாவிட்டால் நாங்கள் எப்படி அரசியல் பணி செய்வது. எனவே எங்களுக்கு என்று ஒரு பொதுவான சின்னம் ஒதுக்க வேண்டும்’ என்றக் கேள்வி முன்வைக்கப்பட்டது.

மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எழுத்துப்பூர்வமான விவர்ங்களைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. மூன்று தரப்பும் தங்கள் வாதங்களை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் திர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்பட இருக்கிறது. தீர்ப்பு டிடிவி தினகரனுக்கு சாதகமாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்