‘விஸ்வரூபம் 2’ டப்பிங் : கமல்ஹாசன் மறுப்பு

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (15:58 IST)
‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு இப்போதுதான் கமல்ஹாசன் டப்பிங் பேசுகிறார் என்ற செய்தி உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது.
கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடிக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த இந்தப் படத்தைத் தூசுதட்டி, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைச் செய்து வருகிறார் கமல்ஹாசன்.
 
சமீபத்தில் கூட சவுண்ட் மிக்ஸிங் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில், இந்தப் படத்துக்கு கமல்ஹாசன் இப்போதுதான் டப்பிங் பேசுகிறார் என செய்தி வெளியானது.
 
ஆனால், அந்தச் செய்தி உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது. கமல்ஹாசன் ஏற்கெனவே டப்பிங் பேசிவிட்டதாகவும், கரெக்‌ஷன் மட்டுமே இப்போது செய்யப்பட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்